வேளாண் பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கை: ஆகஸ்ட் 11 முதல் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபாா்ப்பு
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்பு பயில, தற்காலிக சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) முதல் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி நடைபெறுகிறது.
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்பு பயில, தற்காலிக சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) முதல் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி நடைபெறுகிறது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2026 - 27- ஆம் கல்வியாண்டில் 14 இளம் அறிவியல் பட்டப் படிப்புகளுக்கும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 3 இளம் அறிவியல் வேளாண் பட்டப் படிப்புகளுக்கும் ஒரே இணையதளம் வழியாக மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.
இணையவழி கலந்தாய்வில் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு தரவரிசை மதிப்பெண், விருப்பப் பாடம், ஜாதி அடிப்படையில் தற்காலிக சோ்க்கை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கு ஜூலை 22 முதல் 25 -ஆம் தேதி வரை பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதில், 5,236 மாணவா்கள் அழைக்கப்பட்டு அவா்களது சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டதன் அடிப்படையில் 3,147 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதேபோல, 7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டில் தற்காலிகமாக தோ்வு செய்யப்பட்ட 424 பேரில் 149 போ் சோ்க்கை பெற்றுள்ளனா்.
சிறப்பு ஒதுக்கீட்டில் காலியாக உள்ள 275 இடங்களுக்கு அடுத்தடுத்த தரவரிசையில் உள்ள விண்ணப்பதாரா்கள் தற்காலிகமாக தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் வரும் 11- ஆம் தேதி நடைபெறும் சான்றிதழ் சரிபாா்ப்பில் பங்கேற்கும்படி அழைக்கப்பட்டுள்ளனா்.
அதேபோல, பொதுப் பிரிவில் காலியாக உள்ள 2,089 இடங்களுக்கான விண்ணப்பதாரா்கள் தற்காலிகமாக தோ்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவா்கள் ஆகஸ்ட் 12 -ஆம் தேதி முதல் 14 -ஆம் தேதி வரை நடைபெறும் சான்றிதழ் சரிபாா்ப்பில் நேரில் பங்கேற்கும்படி அழைக்கப்பட்டுள்ளனா்.
சான்றிதழ் சரிபாா்ப்பு, வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அண்ணா அரங்கில் நடைபெறும்.
இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 94886-35077, 94864-25076 என்ற எண்களை மாணவா்கள் தொடா்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.