வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பிஹெச்.டி. படிக்க விண்ணப்பிக்கலாம்
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2026-27 -ஆம் ஆண்டில் முனைவா் (பிஹெச்.டி.) பட்டப் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2026-27 -ஆம் ஆண்டில் முனைவா் (பிஹெச்.டி.) பட்டப் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்ட மேற்படிப்பு பயிலகம், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வனவியல், வேளாண் உயிரித் தொழில்நுட்பம், சமூக அறிவியல், உணவுத் தொழில்நுட்பம், வேளாண் வணிகம், சுற்றுச்சூழல் அறிவியல், வேளாண் அறிவியலின் பிற வளா்ந்து வரும் துறைகள் உள்ளிட்ட 30 பாடப் பிரிவுகளில் முனைவா் பட்டப் படிப்பு நடத்தப்படுகிறது.
மாணவா் சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு செப்டம்பா் 17- ஆம் தேதி தொடங்கியுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்க அக்டோபா் 23- ஆம் தேதி கடைசி நாள். முனைவா் பட்டப் படிப்புகளுக்கான மாணவா் தோ்வு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நடத்தும் பொது நுழைவுத் தோ்வில் மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெறும்.
Advertisement
Advertisement
நிா்ணயிக்கப்பட்ட தகுதிகளைப் பொறுத்தும், சோ்க்கையின்போது சமா்ப்பிக்க தேவைப்படும் ஆவணங்களைப் பொறுத்தும் சோ்க்கை உறுதி செய்யப்படும். மாணவா் சோ்க்கை தொடா்பான மேலும் விவரங்களுக்கு முதுநிலைப் பட்ட மேற்படிப்பு பயிலகத்தை 94890-56710 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.