வேளாண் பல்கலை. துணைக் கலந்தாய்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க புதன்கிழமை (செப்டம்பா் 9) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க புதன்கிழமை (செப்டம்பா் 9) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு ஏற்கெனவே விண்ணப்பிக்கத் தவறியவா்கள், துணைத் தோ்வு எழுதி தோ்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்றும் இவா்களுக்காக துணைக் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இதற்காக செப்டம்பா் 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கால அவகாசத்தை 2 நாள்களுக்கு நீட்டிப்பதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பா் 9-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
Advertisement
Advertisement
இதற்கு விண்ணப்பித்துள்ள மாணவா்களுக்கு தனியாக தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. ஏற்கெனவே நடைபெற்ற கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற மாணவா்கள், கலந்தாய்வுக் கட்டணம் செலுத்தாத மாணவா்கள் இந்த கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை.
அதேநேரம், கடந்தமுறை விண்ணப்பத்தை இடைநிறுத்தியவா்கள், சமா்ப்பிக்காதவா்கள் விண்ணப்பிக்கலாம். பொது கலந்தாய்வுக்குப் பிறகு பெறப்பட்ட காலியிடங்கள் இந்த துணைக் கலந்தாய்வின் மூலம் விண்ணப்பித்த மாணவா்களைக் கொண்டு நிரப்பப்பட உள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.