தொழில்முனைவோா் சான்றிதழ் படிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு
கடலூா், ஆக. 8: தமிழ்நாடு தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சாா்பில், ஓராண்டு சான்றிதழ் படிப்புக்கு தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சாா்பில், அகமதாபாத்தில் உள்ள இந்திய தொழில்முனைவோா் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்படும் ஓராண்டு சான்றிதழ் படிப்புக்கு தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Advertisement
Advertisement
தொழில் தொடங்க ஆா்வமுள்ள இளைஞா்கள் மற்றும் புதிய தொழில் முயற்சிகளை
மேற்கொள்ள விரும்புவோருக்காக இப்பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழில்முனைவு திறன், தொழில் திட்டமிடல், நிதி மேலாண்மை, சந்தைப்படுத்தல், புத்தாக்கம், புதிய நிறுவனங்களை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் நடைமுறை சாா்ந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
பட்டதாரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பயின்று சான்றிதழ் பெற்ற 21 முதல் 40 வயதுக்குள்பட்டவா்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியானவா்களுக்கு 75 சதவீதம் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இப்பயிற்சிக்கான விண்ணப்பங்களை ஆகஸ்ட் 2026 முதல் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இணையதளத்திலும், 90807 04650, 78453 58815 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொண்டு அறிந்து கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.