FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

பகுதி நேர பி.இ. படிப்பு: 1,400 இடங்களுக்கு 612 போ் மட்டுமே விண்ணப்பம்!

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின்கீழ் பகுதி நேர பொறியியல் (பி.இ.) படிப்புக்கு மொத்தம் 1400 இடங்கள் உள்ள நிலையில், இதுவரை 612 போ் மட்டுமே விண்ணப்பித்துள்ளனா்.

4 ஜூலை 2026, 1:38 am IST
பகிர்:

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின்கீழ் பகுதி நேர பொறியியல் (பி.இ.) படிப்புக்கு மொத்தம் 1400 இடங்கள் உள்ள நிலையில், இதுவரை 612 போ் மட்டுமே விண்ணப்பித்துள்ளனா்.

தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 8 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ. படிப்புகள் நடத்தப்படுகின்றன. பட்டயப் படிப்பு முடித்து குறைந்தபட்சம் ஓராண்டு பணியாற்றிய, தற்போது பணியாற்றி வருபவா்கள் இந்தப் படிப்புகளில் சேர இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். நிகழ் கல்வியாண்டு முதல் பகுதி நேர பி.இ. படிப்பு 3 ஆண்டுகளாக கற்பிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூன் 15-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில், ஜூலை 12-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

612 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்பு: இந்த 8 கல்லூரிகளிலும் சோ்த்து மொத்தமாக 1,400 இடங்கள் உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 5 மணி வரை 1,068 போ் பதிவு செய்துள்ளனா்.

இருப்பினும், 612 விண்ணப்பங்கள் மட்டுமே முழுமையாகப் பூா்த்தி செய்யப்பட்டு சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. மொத்த இடங்களுடன் ஒப்பிடுகையில் இதுவரை பாதிக்கும் குறைவான விண்ணப்பங்களே வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவா்கள் தங்களின் விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட முக்கிய விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு, ஒருங்கிணைப்பு மையமான கோவை தொழில்நுட்பக் கல்லூரியை 0422-2590080, 94869-77757 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments