சேயோன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு!
சேயோன் படப்பிடிப்பு அப்டேட் வெளியானது...
சேயோன் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்க்கடவுள் முருகனை படிமமாக வைத்து இதன் கதை எழுதப்பட்டுள்ளதால் சேயோன் பெயரையும் வைத்துள்ளனர்.
இதில், நாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸும் முக்கிய கதாபாத்திரத்தில் சீமான், பால சரவணன், சிங்கம் புலி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் மதுரை வாழ்வியல் சார்ந்த படமாக உருவாகிறது.
Advertisement
Advertisement
இப்படத்தை இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் - 2 படம் தீபாவளி வெளியீட்டைக் குறி வைத்துள்ளதால் சேயோன் படத்தை அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
The second schedule of the film Seyon has been completed.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.