FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சூப்பர்ஸ்டார் ரஜினியின் தர்மன்! இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்மன் திரைப்படத்தின் 2 ஆம் கட்ட படப்பிடிப்பு நிறைவு...

4 செப்டம்பர் 2026, 7:07 pm IST
தர்மன் திரைப்படத்தின் 2 ஆம் கட்ட படப்பிடிப்பு நிறைவு - youtube
பகிர்:

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் “தர்மன்” திரைப்படத்தின் 2 ஆம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் 173 ஆவது படம் “தர்மன்”. நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை, டியூட் திரைப்பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார்.

இசையமைப்பாளர் அனிருத் இசையில், நடிகர்கள் சிம்ரன், ராஷி கன்னா ஆகியோர் நடிகப்பில் மிகப் பெரிய பொருள் செலவில் உருவாகும் இந்தப் படம் 2027 ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கிய தர்மன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக, இன்று (செப். 4) படக்குழு சிறப்பு விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

முன்னதாக, ரஜினிகாந்த் மருத்துவராக நடிக்கும் இந்தப் படத்தின் பின்னணி இசை மற்றும் போஸ்டர்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

summary

second schedule of filming for the movie "Dharman," starring Superstar Rajinikanth, has been completed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments