ராஷி கன்னாவுடன் ரஜினிகாந்த்! தர்மன் படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது!
தர்மன் படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியதாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து விடியோ வெளியிட்டுள்ளார்.
தர்மன் படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியதாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து விடியோ வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 173-வது திரைப்படத்திற்குத் ’தர்மன்’ எனப் பெயரிட்டுள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை, ஓ மை கடவுளே, டிராகன் திரைப்படங்களின் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.
Advertisement
Advertisement
நடிகர்கள் சிம்ரன், ராஷி கன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களின் நடிக்கின்றனர். ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகிவரும் இப்படத்தில் ரஜினி மருத்துவராக நடிக்கிறார். இது, படையப்பா மற்றும் வேட்டையாடு விளையாடு கலவையாக இருக்கும் என இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார்.
இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி ரஜினிக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
முன்னதாக, ரஜினிகாந்த்தின் போஸ்டர்கள் மற்றும் படப்பிடிப்புத் தளக் காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன.
இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியதாக அறிவித்துள்ள இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, ரஜினிகாந்துடன் ராஷி கன்னா நடிக்கும் காட்சியை படமாக்கும் விடியோவை வெளியிட்டுள்ளார்.
இப்படம் 2027 ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Director Ashwath Marimuthu has released a video announcing the commencement of the third schedule of the film Dharman.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.