5-வது முறையாக ரஜினியுடன் இணைந்து நடிக்கும் நயன்தாரா!
தர்மன் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா...
நடிகை நயன்தாரா தர்மன் திரைப்படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை நயன்தாரா நடித்து முடித்த மூக்குத்தி அம்மன் - 2 திரைப்படம் தீபாவளி வெளியீடாக வருகிற நவ.6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும், சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில், நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாகவும் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில், தர்மன் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
சந்திரமுகி, குசேலன், தர்பார், அண்ணாத்தே ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து 5-வது முறையாக நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கிறார்.
நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் - 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் தர்மன் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
It has been announced that actress Nayanthara has joined the film Dharman.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.