காங்கயத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல் துவக்கம்
தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு காங்கயத்தில் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
காங்கயம்: தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு காங்கயத்தில் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
காங்கயம் நகரம், அய்யாசாமி நகர் காலனியில் அமைந்துள்ள நியாயவிலைக் கடையில், திருப்பூர் மாவட்ட வேளாண்மை விற்பனைக் குழு தலைவர் வெங்கு ஜி மணிமாறன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ரொக்கப் பணம் ரூ.2,500 மற்றும் அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பை காங்கயம் சட்டப்பேரவை உறுப்பினர் உ.தனியரசு வழங்கினார்.
இதில், அதிமுக மாவட்ட பொருளாளர் கே.ஜி.கே. கிஷோர்குமார், காங்கயம் முன்னாள் எம்.எல்.ஏ., செல்வி முருகேசன், ஒன்றிய இலக்கிய அணி செயலர் கே.கே.பழனிசாமி , கூட்டுறவு கட்டிட சங்கத் தலைவர் என்.பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement