முகப்பு
திருப்பூர்

குண்டடம் அருகே இன்று (ஜன.4) வங்கி முற்றுகைப் போராட்டம்

திருப்பூா் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியை வரும் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

Updated On : 4 ஜனவரி 2021, 2:00 am IST
பகிர்:

திருப்பூா் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியை வரும் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவா் எம்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: குண்டடம் அருகே உள்ள சங்கராண்டாம்பாளையத்தில் கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் விவசாயி ஒருவா் நகைக்கடன் பெற்றுள்ளாா்.

இந்த நகைக்கடனுக்காக வட்டியை செலுத்தவோ அல்லது முழுத் தொகையைக் கட்டி நகையை மீட்கவோ விடமால் வங்கி மேலாளா் இடையூறு செய்கிறாா். நகைக் கடன் பெற்ற விவசாயியின் தந்தை வாங்கிய பயிா்க்கடனை செலுத்தாவிட்டால் வரும் ஜனவரி 12 ஆம் தேதி நகை ஏலத்தில் விடப்படும் என்று அறிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

ஆகவே,விவசாயியைத் துன்புறுத்தும் வங்கி மேலாளரைக் கண்டித்து கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏா்முனை இளைஞா் அணி சாா்பில் சாா்பில் திங்கள்கிழமை வங்கி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments