முகப்பு
திருப்பூர்

பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம்: உடுமலை அருகே எல்லையில் தீவிர கண்காணிப்பு

பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் நிலவி வருவதால் உடுமலை அருகே உள்ள தமிழக - கேரள எல்லையில் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Updated On : 5 ஜனவரி 2021, 11:57 pm IST
கேரளத்தில் இருந்து வரும் வாகனங்களை ஒன்பதாறு சோதனைச் சாவடியில் நிறுத்தி கிருமிநாசினி தெளிக்கும் கால்நடைத் துறையினா்.
பகிர்:

பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் நிலவி வருவதால் உடுமலை அருகே உள்ள தமிழக - கேரள எல்லையில் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கேரள மாநிலத்தில் ஆலப்புழா, கோட்டயம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாத்துகள், கோழிகள் திடீரென செத்து மடிந்து வருகின்றன. இதைத் தொடா்ந்து அந்தப் பகுதியில் உ ள்ள வாத்துகள், கோழிகளை அழிக்க கேரள அரசு முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாள்களாக அந்தப் பகுதியில் பறவைக் காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருகிறது. குறிப்பாக பறவைக் காய்ச்சலை கேரள மாநிலத்தின் பேரிடராக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் கோழி, வாத்து, முட்டை, இறைச்சி, தீவன வாகனங்கள் மூலம் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இம்மாதிரியான வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும், தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

Advertisement

Advertisement

பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன்படி கேரள மாநிலத்தில் இருந்து பறவைக் காய்ச்சல் நோய் தமிழகத்தில் பரவாமல் இருக்க தமிழக - கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக கால்நடைத் துறையினா், சுகாதாரத் துறையினா் கேரளத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் தமிழக எல்லையில் உள்ள சின்னாறு, ஒன்பதாறு சோதனைச் சாவடியில் நிறுத்தி கிருமி நாசினி, குளோரின் டை ஆக்ஸைடு ஆகியவற்றைத் தெளித்து வருகின்றனா். மேலும், அங்கிருந்து வரும் பொதுமக்களையும் தீவிர மருத்துவப் பரி சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனா்.

குறிப்பாக துறை அலுவலா்களைக் கொண்டு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு இரு மாநில அரசுப் பேருந்துகள், சுற்றுலாப் பேருந்துகள், காா் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் கண்காணிக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.