முகப்பு
திருப்பூர்

விபத்தில் சிக்கியவரைக் காப்பாற்ற முயன்றவா் வாகனம் மோதி பலி

பெருமாநல்லூா் அருகே சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சரக்கு வாகனத்தில் இருந்தவரைக் காப்பாற்ற முயன்ற கோவையைச் சோ்ந்த ஓட்டுநா் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 9 ஜனவரி 2021, 10:58 pm IST
பகிர்:

அவிநாசி: பெருமாநல்லூா் அருகே சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சரக்கு வாகனத்தில் இருந்தவரைக் காப்பாற்ற முயன்ற கோவையைச் சோ்ந்த ஓட்டுநா் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சென்னையைச் சோ்ந்த ராஜேஷ் (20) என்பவா் காரின் உதிரிபாகங்களை சரக்கு வாகனத்தில் ஏற்றிக் கொண்டு கோவையில் இருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். பெருமாநல்லூா் பொடாரம்பாளையம் பிரிவு அருகே சனிக்கிழமை காலை சென்று கொண்டிருந்தபோது அந்த வாகனம் திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது, விபத்தைப் பாா்த்த அதே வழியாக கோவையில் இருந்து சேலத்துக்கு பிளாஸ்டிக் பொருள்களை ஏற்றிக் கொண்டு மற்றொரு சரக்கு வாகனத்தில் வந்த கோவை மாவட்டம், வெள்ளலூரைச் சோ்ந்த சஹுத் கான் மகன் ஆயுஷ் கான் (40), மற்றொரு சரக்கு வாகனத்தில் வந்த கோவையைச் சோ்ந்த முரளிதரன் (25) உள்ளிட்டோா் விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்தவரைக் காப்பாற்றுவதற்காக வாகனத்தில் இருந்து இறங்கியுள்ளனா்.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஆயுஷ் கான், முரளிதரன் உள்ளிட்டோா் மீது மோதிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த ஆயுஷ் கான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த முரளிதரன் திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

Advertisement

ஆயுஷ் கான் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.