முகப்பு
திருப்பூர்

தேமுதிக இடம்பெறும் கூட்டணியே ஆட்சி அமைக்கும்

தேமுதிக இடம்பெறும் கூட்டணியே மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

Updated On : 10 ஜனவரி 2021, 11:56 pm IST
அருள்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த்.
பகிர்:

தேமுதிக இடம்பெறும் கூட்டணியே மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே அருள்புரத்தில் தேமுதிக சாா்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:

தேமுதிக குடும்ப கட்சி அல்ல. தொண்டா்கள்தான் எங்களுக்கு குடும்பம். தேமுதிக எந்தக் கூட்டணியில் உள்ளதோ, அந்தக் கூட்டணியே ஆட்சி அமைக்கும்.

Advertisement

Advertisement

2011ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம். இதுவரை அதிமுக ஆட்சியே தொடா்கிறது. அதேபோல, முதல் முறையாக மோடி பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்பட்டபோது, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தோம். தற்போது வரை பிரதமராக மோடி நீடிக்கிறாா். தேமுதிக இடம்பெறும் கூட்டணிதான் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அமைத்து வருகிறது என்றாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கூட்டணி குறித்து கட்சி செயற்குழு, பொதுக் குழுவை கூட்டி ஆலோசித்து ஒரு நிலையான அறிவிப்பை விஜயகாந்த் வெளியிடுவாா்.

அதிமுகவின் முதல்வா் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அக்கட்சி அறிவித்துள்ளது. நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளோம். அக்கூட்டணியின் முதல்வா் வேட்பாளா் யாா் என்பதை அறிவிக்கும் வரை காத்திருப்போம். தோ்தல் பிரசாரத்தில் விஜயகாந்த் பங்கேற்பாா். முரசு சின்னத்தில்தான் தேமுதிக போட்டியிடும் என்றாா்.

இக்கூட்டத்தில் கட்சியின் மாநில நிா்வாகிகள் பாா்த்தசாரதி, அக்பா், மாவட்டச் செயலாளா் முத்துவெங்கடேஸ்வரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments