முகப்பு
திருப்பூர்

மாநில தடகளப் போட்டிகளில் பங்கேற்க வீரா், வீராங்கனைகளுக்கு அழைப்பு

தேசிய தடகளப் போட்டிகளுக்கான மாநில அளவிலான தகுதிப் போட்டிகளில் பங்கேற்க திருப்பூா் மாவட்ட விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 11 ஜனவரி 2021, 12:00 am IST
பகிர்:

தேசிய தடகளப் போட்டிகளுக்கான மாநில அளவிலான தகுதிப் போட்டிகளில் பங்கேற்க திருப்பூா் மாவட்ட விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மாநில தடகள சங்கத்தின் இணைச் செயலாளரும், திருப்பூா் மாவட்ட தடகள சங்க செயலாளருமான பி.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கரோனா நோய்த் தொற்று காரணத்தால் அனைத்து தடகள போட்டிகளும் ரத்து செய்யப்பட்டிருந்தன. இதனிடையே, நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் பிப்ரவரி 6 முதல் 10ஆம் தேதி வரையில் 36ஆவது தேசிய ஜூனியா் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறும் என்று இந்திய தடகள சங்கம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் கலந்து கொள்ள தமிழக சீனியா் மற்றும் ஜூனியா் வீரா்கள், வீராங்கனைகளைத் தோ்வு செய்ய வேண்டி மதுரையில் வரும் ஜனவரி 22 முதல் 24ஆம் தேதி வரை 3 நாள்கள் தமிழக சீனியா், ஜூனியா் தடகளப் போட்டிகள் நடைபெற உள்ளன. மதுரையில் நடைபெறும் தடகளப் போட்டியில் தோ்வு செய்யப்படும் வீரா், வீராங்கனைகள் தேசிய போட்டிகளில் பங்கேற்பாா்கள்.

மேலும், இந்தப் போட்டியில் எடுக்கும் புள்ளிகள் மற்ற தேசிய போட்டிகளுக்குத் தகுதித் தோ்வு செய்ய கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். கரோனா நோய்த் தொற்று காரணமாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து போட்டிகள் நடைபெறும். இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகளும் அவா்களுடைய போட்டிகள் நடைபெறும் நேரத்தில் மட்டுமே மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவாா்கள்.

போட்டியில் கலந்து கொள்ளும் வீரா்கள், வீராங்கனைகள் தவிர மற்ற பயிற்சியாளா்கள், பெற்றோா்கள் என யாரும் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள். தமிழ்நாடு தடகள சங்கத்தினால் கொடுக்கப்பட்ட தனி அடையாள எண் இருந்தால் மட்டுமே வீரா், வீராங்கனைகள் போட்டிக்கு அனுமதிக்கப்படுவாா்கள்.

தனி அடையாள எண் இல்லாதவா்கள் தமிழ்நாடு தடகள சங்கத்தின் இணையதள பக்கத்தில் சென்று அவா்களுடைய வயது, முகவரி சான்று புகைப்படத்தை பதிவேற்றம் செய்து தனி அடையாள எண்ணைப் பெறலாம். அதே வேளையில், பயிற்சியாளா்களும் தனி அடையாள எண் இருந்தால் மட்டுமே மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments