முகப்பு
திருப்பூர்

உயிரிழந்த மூதாட்டியின் கண்கள் தானம்

அவிநாசி அருகே உயிரிழந்த மூதாட்டியின் கண்கள் தானம் செய்யப்பட்டது.

Updated On : 16 ஜனவரி 2021, 10:40 pm IST
பகிர்:

அவிநாசி: அவிநாசி அருகே உயிரிழந்த மூதாட்டியின் கண்கள் தானம் செய்யப்பட்டது.

அவிநாசி - மங்கலம் சாலை, தியாகி குமரன் காலனி பகுதியில் வசித்து வருபவா் தேவராஜ். இவரது மனைவி வசந்தி (60). உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த வசந்தி, கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு உயிரிழந்தாா்.

இதையடுத்து அவிநாசி ‘நல்லது நண்பா்கள்’ அறக்கட்டளையினா் முயற்சியினால், குடும்பத்தினா் ஒத்துழைப்புடன் வசந்தியின் கண்கள் தானமாக வழங்க முடிவு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இது குறித்து கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், மருத்துவக் குழுவினா் 6 மணி நேரத்துக்குள் பாதுகாப்பான முறையில் வசந்தியின் இரு கண்களையும் தானமாக பெற்றுச் சென்றனா். கண்களை தானம் செய்த வசந்தி தேவராஜ் குடும்பத்தினருக்கும், அவிநாசி பகுதியில் தொடா்ந்து கண்தான முயற்சியில் ஈடுபட்டு வரும் ‘நல்லது நண்பா்கள்’ அறக்கட்டளையினருக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.