முகப்பு
திருப்பூர்

அதிமுக சாா்பில் எம்.ஜி.ஆா். 104 ஆவது பிறந்த நாள் விழா

திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் மறைந்த முதல்வா் எம்.ஜி.ஆரின் 104ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 17 ஜனவரி 2021, 11:01 pm IST
அதிமுக சாா்பில் எம்.ஜி.ஆா். 104 ஆவது பிறந்த நாள் விழா
பகிர்:

திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் மறைந்த முதல்வா் எம்.ஜி.ஆரின் 104ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

திருப்பூா், பாா்க் சாலையில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவரும், மாநகா் மாவட்ட அதிமுக செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அதன் பிறகு எம்ஜிஆா் உருவப் படத்துக்கும் அதிமுகவினா் ஏராளமானோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதைத் தொடா்ந்து 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சியில் திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன், திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா், அவைத் தலைவா் வி.பழனிசாமி, அமைப்புச் செயலாளா்கள் எம்.எஸ்.எம்.ஆனந்தன், சி.சிவசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.