முகப்பு
திருப்பூர்

பழையகோட்டை மாட்டுச் சந்தை: ரூ. 11 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே நத்தக்காடையூா், பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் ரூ.11 லட்சத்துக்கு விற்பனையாயின.

Updated On : 17 ஜனவரி, 2021 at 11:02 PM
பழையகோட்டை காங்கேயம் இன மாட்டுச் சந்தையில் ரூ. 75 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட காங்கேயம் இன மயிலை வகைப் பசு.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:49 AM

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே நத்தக்காடையூா், பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் ரூ.11 லட்சத்துக்கு விற்பனையாயின.

பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் காங்கேயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 50 மாடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன. இதில் 35 மாடுகள் மொத்தம் ரூ. 11 லட்சத்துக்கு விற்பனையாயின.

Advertisement

அதிகபட்சமாக ரூ.75 ஆயிரத்துக்கு கன்றுக்குட்டியுடன் காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.