முகப்பு
வணிகம்

வருமானவரி தாக்கல் செய்ய அக்.31 வரை மீண்டும் காலக்கெடு நீட்டிப்பு

குறிப்பிட்ட நிறுனவங்கள் வருமானவரி தாக்கல் செய்ய மீண்டும் 2-ஆவது முறையாக காலக்கெடு திங்கள்கிழமை நீட்டிக்கப்பட்டது.  

Updated On : 8 அக்டோபர் 2018, 8:51 pm IST
பகிர்:

குறிப்பிட்ட நிறுனவங்கள் வருமானவரி தாக்கல் செய்ய மீண்டும் 2-ஆவது முறையாக காலக்கெடு திங்கள்கிழமை நீட்டிக்கப்பட்டது.  

தணிக்கை தேவைப்படும் கம்பெனிகள் தங்களது வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் காலக்கெடுவை வரும் அக்டோபர் 31-ஆம் தேதி வரை வருமான வரித் துறை நீட்டிப்பு செய்துள்ளது.

தணிக்கை தேவைப்படும் கம்பெனிகள் 2017-18 நிதியாண்டுக்கு (மதிப்பீட்டு ஆண்டு 2018-19) வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய கடைசி தேதி செப்டம்பர் 30 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த காலக்கெடு மீண்டும் அக்டோபர் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 

Advertisement

Advertisement

இந்நிலையில், இந்தக் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கையை ஏற்று, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.