மாருதியின் புதிய வேகன்ஆர் மாடலுக்கான முன்பதிவு தொடக்கம்
மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம், நவீன தொழில்நுட்பத்தில் வெளியிடவுள்ள புதிய வகை வேகன்ஆர் கார்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம், நவீன தொழில்நுட்பத்தில் வெளியிடவுள்ள புதிய வகை வேகன்ஆர் கார்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை கூறியுள்ளதாவது:
மூன்றாம் தலைமுறைக்கான வேகன்ஆர் புதிய பதிப்பு ஜனவரி 23-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான முன்பதிவு நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. இக்காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் நாடு முழுவதிலுமுள்ள மாருதி சுஸுகியின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்களிடம் ரூ.11,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதைத் தவிர, வாடிக்கையாளர்கள் மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வாயிலாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கி வெளிவரவிருக்கும் பிக் நியூ வேகன்ஆர் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினும் மற்றொரு மாடலில் 1 லிட்டர் என்ஜினும் பொருத்தப்பட்டுள்ளன.
இவற்றில் ஆட்டோமேட்டிக் கியர் வசதியும் உள்ளது என்று மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.