ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் 100ஜிபி-க்கு மேல் நினைவகம்
அதிக திறன் கொண்ட கேமரா மற்றும் பயன்படுத்தப்படும் செயலிகளின் அளவு அதிகரித்ததே ஸ்மார்ட்போன்களின் நினைவகத்திறன் அதிகரிப்பதற்கான தேவையை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்மார்ட்போன்களுக்கான சராசரி நினைவகத் திறன் 100ஜிபியைத் தாண்டியுள்ளது.
அதிக திறன் கொண்ட கேமரா மற்றும் பயன்படுத்தப்படும் செயலிகளின் அளவு அதிகரித்ததே ஸ்மார்ட்போன்களின் நினைவகத்திறனை அதிகரிப்பதற்கான தேவையை ஏற்படுத்தியுள்ளது.
ஐஓஎஸ் இயங்குதளம் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு இடையேயான நினைவகத் திறனில் அதிக அளவு வேறுபாடுகள் உள்ளன.
Advertisement
Advertisement
ஐஓஎஸ் இயங்குதள ஸ்மார்ட்போன்களின் நினைவகம் கடந்த 2020-ம் ஆண்டின் நான்காம் காலாண்டில் 140.9GB-ஆக இருந்தது. ஆனால் இதே காலாண்டில் ஆண்டிராய்டு இயங்குதள ஸ்மார்போன்களின் நினைவகம் 95.7GB-ஆக இருந்தது.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் நினைவகம் அதிகரித்து வந்துள்ளது இதன் மூலம் வெளிப்படையாகத் தெரிகிறது. 2020-ம் ஆண்டில் ஆண்ட்ராய்டு நினைவக திறன் 20.5% அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்களின் நினைவக திறன் 5.6% மட்டுமே அதிகரித்துள்ளது.
ஐஓஎஸ் இயங்குதளமான ஆப்பிள் நிறுவனம், 2018-ம் ஆண்டு முதல் 512GB நினைவகத்தைக் கொண்டுள்ள ஸ்மார்ட் போன்களை வெளியிட்டுள்ளது. ஆனால் அதன்பிறகு நினைவகத் திறனை விரிவாக்கம் செய்யும் பணிகளை அந்நிறுவனம் மேற்கொள்ளவில்லை.
ஆனால், மிகப்பெரிய ஆண்ட்ராய்டு இயங்குதளமான சாம்சங், ஸ்மார்ட்போன்களின் நினைவகத் திறனை தொடர்ந்து அதிகரித்து வந்தது.
2019-ன் முதல் காலாண்டு முதல் 2020-ன் நான்காம் காலாண்டுவரை ஸ்மார்ட்போன்களின் நினைவகத் திறன் 20.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2019-ல் 80.7GB-யிலிருந்து 2020-ல் 97.11GB ஆக அதிகரித்துள்ளது. எனினும் ஐஓஎஸ் இயங்குதள ஸ்மார்ட்போன்களின் நினைவகத் திறன் இதேகாலகட்டத்தில் 5.6 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளது.
மேலும், இதேகாலகட்டத்தில் அதிக நினைவகத் திறன் (256GB மற்றும் 512GB) கொண்ட ஐஓஎஸ் இயங்குதள ஸ்மார்ட்போன்களின் விற்பனையும் சரிந்தே காணப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.