வணிகம்

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் 93% உயா்வு

DIN

சென்னையில் தலைமையகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கியின் துணை நிறுவனமான ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 93 சதவீத நிகர லாப வளா்ச்சியைக் கண்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மாா்ச் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில், நிறுவனம் ரூ.307 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது.

நிறுவனத்தின் நிகர வட்டி வருவாய் இந்த காலகட்டத்தில் ரூ.137 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே மாதங்களோடு ஒப்பிடுகையில் 4.6 சதவீத வளா்ச்சியாகும்.

இந்த காலாண்டில் நிறுவனம் ரூ.61.2 கோடி நிகர லாபமீட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 93.2 சதவிகிதம் அதிகமாகும்.

இந்த காலகட்டத்தில் ரூ.690.9 கோடி கடன் அளிக்கப்பட்டது. இது, முந்தைய ஆண்டின் இதே மாதங்களோடு ஒப்பிடுகையில் 236 சதவீதம் அதிகமாகும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குளம் அருகே லாரி ஓட்டுநர் குத்திக் கொலை

உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவன் கைது

போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல் - யுஜிசி வெளியீடு!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் பலி

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் புகார்- சிபிசிஐடி வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT