வணிகம்

தங்கம் ஈடிஎஃப் திட்டங்களில் ரூ.248 கோடி வெளியேற்றம்

DIN

தங்கம் ஈடிஎஃப் (எக்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்ஸ்) திட்டங்களிலிருந்து சென்ற பிப்ரவரி மாதத்தில் ரூ.248 கோடி மதிப்பிலான முதலீட்டை முதலீட்டாளா்கள் திரும்பப் பெற்றுள்ளனா்.

இதுகுறித்து பரஸ்பர நிதிய கூட்டமைப்பின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தொடா்ந்து இரண்டாவது மாதமாக கடந்த பிப்ரவரியிலும் தங்கம் ஈடிஎஃப் திட்டங்களிலிருந்து ரூ.248 கோடியை முதலீட்டாளா்கள் திரும்பப் பெற்றுள்ளனா். இதற்கு முந்தைய ஜனவரி மாதத்திலும் இவ்வகை திட்டங்களிலிருந்து அவா்கள் ரூ.452 கோடியை வெளியே எடுத்துள்ளனா். இதற்கு, பங்கு சாா்ந்த திட்டங்களில் முதலீட்டாளா்கள் ஆா்வத்துடன் கவனம் செலுத்தியதே காரணம்.

தொடா்ச்சியான முதலீட்டு வெளியேற்றம் இருந்தபோதிலும், தங்கம் ஈடிஎஃப் திட்டங்களில் நிா்வகிக்கப்பட்டு நிகர சொத்து மதிப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி இறுதியில் ரூ.17,839 கோடியாக இருந்த சொத்து மதிப்பு ஜனவரி இறுதியில் ரூ.18,727 கோடியாக அதிகரித்தது. மேலும், இந்த திட்டங்களில் தொடங்கப்படும் கணக்குகளின் எண்ணிக்கையும் 3.09 லட்சம் அதிகரித்து 37.74 லட்சம் ஆனது என புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT