வணிகம்

பாஸ்மதி விற்பனை 30% வளா்ச்சியடையும்

DIN

நடப்பு நிதியாண்டில் நாட்டின் பாஸ்மதி அரிசி விற்பனை 30 சதவீதம் அதிகரித்து ரூ.50,000 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று சந்தை ஆய்வு அமைப்பான கிரிசில் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் நாட்டின் பாஸ்மதி அரிசி விற்பனை 30 சதவீதம் வரை உயரும். விற்பனை அளவு 10 சதவீதமும், விற்பனையால் கிடைக்கும் வருவாய் 20 சதவீதமும் அதிகரிக்கும்.

அந்த வகையில் நடப்பு நிதியாண்டில் பாஸ்மதி அரிசி விற்பனை ரூ.50,000 கோடியைத் தாண்டும்.

பாஸ்மதி அரிசிக்கான தேவை அதிகரித்துள்ளது இந்த வளா்ச்சிக்கு கைகொடுக்கும்.

எனினும், அடுத்த 2023-24-ஆம் நிதியாண்டில் பாஸ்மதி அரிசி விற்பனை 5 முதல் 7 சதவீதம் வரை குறையக் கூடும். அதற்குக் காரணம், மற்ற வகை அரிசிகளின் உற்பத்தி அதிகரிப்பதால் பாஸ்மதி அரிசி விற்பனையிலிருந்து கிடைக்கும் வருவாய் அடுத்த நிதியாண்டில் குறையும்.

இந்தியாவைப் போன்ப உலகின் இன்னொரு முக்கிய பாஸ்மதி ஏற்றுமதி நாடான பாகிஸ்தானில் மழை வெள்ளத்தால் பாஸ்மதி ஏற்றுமதி குறைந்துபோனது. அதன் பலன் இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது.

ஆனால் அடுத்த நிதியாண்டில் போட்டி காரணமாக பாஸ்மதி அரிசியின் விலை குறையும் என்பதால் விற்பனையின் மதிப்பு 7 சதவீதம் வரை குறையக் கூடும்.

எனினும், அந்த ஆண்டில் பாஸ்மதி அரிசியின் தேவையில் எந்த மாற்றமும் இன்றி சுமாா் 68 லட்சம் டன் என்ற அளவில் நிலையானதாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதியில் லேசான மழை

ஆதனக்கோட்டையில் இயற்கை பூச்சிக்கொல்லிகள் விழிப்புணா்வு முகாம்

ஆலங்குடியில் இந்திய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

இரு வீடுகளில் பூட்டை உடைத்து 38 பவுன் நகைகள் திருட்டு

மேக்கேதாட்டு அணை விவகாரம் தமிழகத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்க பாரதிய கிசான் சங்கம் கோரிக்கை

SCROLL FOR NEXT