வணிகம்

நிலக்கரி உற்பத்தி 61 கோடி டன்னாக அதிகரிப்பு

DIN

நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் இந்தியாவின் நிலக்கரி உறபத்தி 60.80 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.

இது குறித்து மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பா் மாதம் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 16.39 சதவீதம் உயா்ந்து 60.80 கோடி டன்னாக உள்ளது.

முந்தைய 2021-ஆம் ஆண்டின் இதே மாதங்களில் நிலக்கரி உற்பத்தி 52.23 கோடி டன்னாக இருந்தது.

நாட்டின் நிலக்கரி உற்பத்தியில் அரசுக்கு சொந்தமான கோல் இந்தியா நிறுவனத்தின் பங்கு 80 சதவீதத்துக்கு மேல் உள்ளது. மதிப்பீட்டு மாதங்களில் அந்த நிறுவனத்தின் உற்பத்தி முந்தை ஆண்டின் அதே காலகட்டத்தைவிட 15.82 சதவீதம் அதிகரித்து 47.9 கோடி டன்னாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவண்ணாவுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

தீரா லிரிக்கல் பாடல் வெளியானது

மூன்றாம் பாலினத்தவருக்குக் கழிப்பறை: உயர்நீதிமன்றத்தில் தில்லி அரசு பதில்!

மழை எனவே பாடல் வெளியானது

சர்வதேச கிரிக்கெட்டில் இளம் வயதில் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய பாகிஸ்தான் வீரர்!

SCROLL FOR NEXT