முகப்பு
வணிகம்

பிரீமியம் மீதான ஜிஎஸ்டியை திரும்பப் பெற ஆயுள் காப்பீட்டு ஊழியர்கள் அமைப்பு கோரிக்கை!

காப்பீட்டு பிரீமியம் மீதான ஜிஎஸ்டியை திரும்பப் பெறுதல், அன்னிய நேரடி முதலீட்டை மேலும் உயர்த்தக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக தெரிவிப்பு.

Updated On : 30 நவம்பர் 2024, 8:05 pm IST
இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் - கோப்புப் படம்
பகிர்:

கொல்கத்தா: காப்பீட்டு பிரீமியம் மீதான ஜிஎஸ்டியை திரும்பப் பெறுதல், அன்னிய நேரடி முதலீட்டை மேலும் உயர்த்தக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக ஆயுள் நிறுவன காப்பீட்டு ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அகில இந்திய ஆயுள் காப்பீட்டு ஊழியர்கள் கூட்டமைப்பின் மாநாட்டில் உரையாற்றிய பொதுச் செயலாளர் வி.நரசிம்மன், கோரிக்கைகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க அனைத்து அரசியல் கட்சிகளின் எம்.பி.க்களையும் அணுகுவோம் என்றார்.

இதையும் படிக்க: கரையைக் கடக்கத் தொடங்கியது ஃபென்ஜால் புயல்

Advertisement

Advertisement

புதிய தொழிலாளர் குறியீடுகளை திரும்பப் பெற வேண்டும், 2010 க்குப் பிறகு எல்.ஐ.சியில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இதில் அடங்கும்.

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு தற்போது 74% இருப்பதாகவும், அதை 100% உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் நரசிம்மன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments