முகப்பு
இந்தியா

பெட்ரோல் - டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு

பெட்ரோல், டீசல் விற்பனை மற்றும் விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகளை அரசு திரும்பப் பெற்றது குறித்து...

Updated On : 29 ஜூன் 2026, 10:16 pm IST
கோப்புப் படம்
பகிர்:

பெட்ரோல், டீசல் விற்பனை மற்றும் விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகளை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு இன்று (ஜூன் 29) அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை, விநியோகம் போன்ற தற்காலிக ஒழுங்குமுறை நடவடிக்கைகளை ஜூலை 1 ஆம் தேதி முதல் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை திரும்பப் பெறுகிறது.

Advertisement

Advertisement

பெட்ரோலிய பொருள்கள் விநியோகத்தின் மீதான ஆய்வைத் தொடர்ந்து, மக்கள் நலனுக்காக பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 12 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ஜூலை 1 முதல் திரும்பப் பெறப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஆசிய போர் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதால், நாட்டில் பெட்ரோல், டீசல் பயன்பாட்டில் சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு பிறப்பித்தது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால், மக்கள் பாதிக்கப்படாத வகையில் எரிபொருள் விலையை கட்டுக்குள் வைத்திருக்கும் விதமாக ஜூன் 12 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விற்பனை மற்றும் விநியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Government withdraws restrictions on sale, distribution of petrol and diesel as supplies improve

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments