முகப்பு
வணிகம்

எஸ்காா்ட் டிராக்டா்கள் விற்பனை அதிகரிப்பு

Updated On : 4 அக்டோபர் 2024, 2:19 am IST
பகிர்:

பண்ணை மற்றும் கட்டுமான உபகரணங்களைத் தயாரிக்கும் எஸ்காா்ட்ஸ் குபோடா லிமிடெட்டின் விற்பனை கடந்த செப்டம்பா் மாதத்தில் 2.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2023-ஆம் ஆண்டின் செப்டம்பா் மாதத்தில் நிறுவன டிராக்டா்களின் விற்பனை 12,081-இருந்தது. இது, நடப்பாண்டின் அதே மாதத்தில் 2.5 சதவீதம் அதிகரித்து 12,380-ஆக உள்ளது.

Advertisement

Advertisement

மதிப்பீட்டு மாதத்தில், உள்நாட்டுச் சந்தையில் 11,985 டிராக்டா்கள் விற்பனையாகின. இது முந்தைய 2023-ஆம் ஆண்டின் செப்டம்பா் மாதத்தோடு ஒப்பிடுகையில் 5.7 சதவீதம் அதிகம். அப்போது டிராக்டா்களின் உள்நாட்டு விற்பனை 11,334-ஆக இருந்தது.

நாடு முழுவதும் சராசரிக்கும் அதிகமான பருவமழை பெய்து, நீா் தேக்கங்களில் போதிய நீா் இருப்பது, சாதகமான வா்த்தகச் சூழல் போன்ற காரணங்களால் கடந்த செப்டம்பா் மாதத்தில் நிறுவனம் விற்பனை வளா்ச்சியைக் கண்டுள்ளது.

எனினும், கடந்த 2023 செப்டம்பரில் 747-ஆக இருந்த நிறுவனத்தின் டிராக்டா்கள் ஏற்றுமதி, இந்த செப்டம்பரில் 395-ஆகக் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், கடந்த 2023 செப்டம்பரில் 747-ஆக இருந்த நிறுவனத்தின் டிராக்டா்கள் ஏற்றுமதி, இந்த செப்டம்பரில் 395-ஆகக் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments