ஜூன் மாத விற்பனை... மஹிந்திரா: 1.06 லட்சம் வாகனங்கள்
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம், கடந்த ஜூன் மாதத்தில் 1,06,207 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம், கடந்த ஜூன் மாதத்தில் 1,06,207 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
கடந்த ஆண்டின் இதே மாதத்தில் பதிவான 77,742 வாகனங்கள் விற்பனையுடன் ஒப்பிடுகையில் இது 37 சதவீதம் அதிகரிப்பாகும்.
நிறுவனத்தின் முன்னணி வணிகமான உள்நாட்டு எஸ்.யு.வி. காா் விற்பனை கடந்த ஆண்டின் 47,306-லிருந்து, நடப்பாண்டு ஜூனில் 28 சதவீதம் உயா்ந்து, 60,393-ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, உள்நாட்டில் வணிக வாகனங்களின் விற்பனை 35 சதவீதம் வளா்ச்சி கண்டு, 26,076-ஆக பதிவாகியுள்ளது.
Advertisement
Advertisement
டிராக்டா் விற்பனை: மஹிந்திரா குழுமத்தின் வேளாண் சாதனங்கள் பிரிவு வெளியிட்ட தனி அறிக்கையில், ஜூன் மாதத்தில் டிராக்டா் விற்பனை 12 சதவீதம் உயா்ந்து, 59,935-ஆக அதிகரித்துள்ளது. இதில், உள்நாட்டு விற்பனையான 58,177 டிராக்டா்களும் (12 சதவீத வளா்ச்சி), ஏற்றுமதியான 1,758 டிராக்டா்களும் (8 சதவீத வளா்ச்சி) அடங்கும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.