முகப்பு
வணிகம்

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல், மார்ச் வரை முடிவடைந்த காலாண்டில், வரிக்குப் பிந்தைய லாபம் 10.4% உயர்ந்து ரூ. 763.4 கோடியாக உள்ளது.

Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:14 PM
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 9:38 PM

புதுதில்லி: ஐசிஐசிஐ புரூடென்ஷியல் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம், மார்ச் வரை முடிவடைந்த காலாண்டில், வரிக்குப் பிந்தைய லாபம் 10.4 சதவீதம் உயர்ந்து ரூ. 763.4 கோடியாக இருப்பதாக தெரிவித்தது.

கடந்த ஆண்டின், இதே காலாண்டில், நிறுவனம் ரூ. 691.7 கோடி வரிக்குப் பிந்தைய லாபத்தைப் பதிவு செய்தது. மார்ச் வரையான காலாண்டில் செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய் 19.5 சதவீதம் உயர்ந்து ரூ. 1,517.1 கோடியை எட்டியது. இதுவே கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூ. 1,269.1 கோடியுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.

2026ஆம் நிதியாண்டிற்காக, பங்குக்கு ஒன்றுக்கு ரூ. 12.40 வீதம் இறுதி ஈவுத்தொகையை வழங்க நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு பரிந்துரைத்துள்ள நிலையில், வரவிருக்கும் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெறுவதற்கு இது உட்பட்டது.

Advertisement

மார்ச் 2026 உடன் முடிவடைந்த நிதியாண்டைப் பொறுத்தவரை, நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் 24.4 சதவீதம் உயர்ந்து ரூ. 3,298.6 கோடியாக இருந்தது. அதே வேளையில், கடந்த நிதியாண்டில் நிறுவனம் ரூ. 2,650.6 கோடியை ஈட்டியது.

செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய் ரூ. 5,764.6 கோடியாக உயர்ந்தது. இதுவே கடந்த நிதியாண்டில் ஈட்டிய ரூ. 4,682.8 கோடியுடன் ஒப்பிடுகையில் இது சற்று அதிகமாகும்.

மும்பை பங்குச் சந்தையில், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் நிறுவன்த்தின் பங்குகள் 1.14 சதவீதம் சரிந்து, பங்கு ஒன்றுக்கு ரூ. 3,351.6 என்ற நிலையில் வர்த்தகம் நிறைவடைந்தது.

summary

ICICI Prudential Asset Management Company reported a 10.4 per cent rise in profit after tax to Rs 763.4 crore during the March quarter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.