பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ரியல் எஸ்டேட், ஐடி, பார்மா பங்குகள் உயர்வு!
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...
கடந்த வாரம் பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று(ஏப். 27) பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 76,856.05 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 281.78 உயர்ந்து 76,945.99 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 103.25
புள்ளிகள் உயர்ந்து 24,001.20 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
Advertisement
Advertisement
நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 1.16 சதவீதம், 1.05 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகிறது.
அதேபோல சென்செக்ஸ் 30 பங்குகளில் ஆக்சிஸ் வங்கி பங்கு மட்டும் சரிந்து மற்ற அனைத்து பங்குகளும் உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.
துறைவாரியாகப் பார்க்கும்போது, நிஃப்டி ரியல் எஸ்டேட், ஐடி,பார்மா உள்ளிட்ட பெரும்பாலான துறைகள் சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிலையில் நிதி சேவைகள், தனியார் வங்கிகள் குறியீடுகள் சரிந்து வருகின்றன.
Stock Market: Sensex pares 300 pts from day high; Nifty tests 24,000
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.