முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் கடும் சரிவு!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...

Updated On : 29 ஜூன் 2026, 11:47 am IST
கோப்புப் படம் - IANS
பகிர்:

இந்திய பங்குச்சந்தையின் சென்செக்ஸ், நிஃப்டி50 குறியீடுகள் இன்று (ஜூன் 29) சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,055.21 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 104.22 புள்ளிகள் குறைந்து 76,996.25 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 15.65 புள்ளிகள் குறைந்து 24,040.35 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

Advertisement

Advertisement

டாக்டர். ரெட்டிஸ் லேபரட்டரீஸ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், எடர்னல் ஆகியவை நிஃப்டி50 குறியீட்டில் அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாக உள்ளன.

நிஃப்டி மிட்கேப், நிஃப்டி ஸ்மால்கேப் முறையே 0.08 சதவீதம், 0.28 சதவீதம் சரிந்து வர்த்தகமாகின.

துறைசார் குறியீடுகளில், நிஃப்டி பார்மா அதிகபட்சமாக 2% உயர்ந்தது, உலோகம், நிதி சேவைகள், ரியல் எஸ்டேட், எஃப்எம்சிஜி குறியீடுகள் சிறப்பாகச் செயல்படுகின்றன. அதே நேரத்தில் நிஃப்டி ஐடி அதிக சரிவைச் சந்தித்தது. மீடியா, ஆட்டோ, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி குறியீடுகள் சரிவுடன் வர்த்தகமாகின்றன.

summary

Stock Market: Sensex falls 100 pts, Nifty holds around 24,050; Nifty Pharma up 2%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments