பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகம்! பார்மா, ரியல் எஸ்டேட் பங்குகள் சரிவு!
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...
வாரத்தின் முதல் நாளான இன்று (ஜூலை 13) இந்திய பங்குச்சந்தையின் சென்செக்ஸ், நிஃப்டி50 குறியீடுகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 76,963.35 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 229.20 புள்ளிகள் குறைந்து 77,351.29 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 76 புள்ளிகள் குறைந்து 24,130.90 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
Advertisement
Advertisement
டாடா ஸ்டீல், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் இன்டர்குளோப் ஏவியேஷன் ஆகியவை நிஃப்டி50 குறியீட்டில் அதிக சரிவைச் சந்தித்த நிறுவனங்களாக உள்ளன.
நிஃப்டி மிட்கேப் 0.29 சதவீதம் சரிந்தும், நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடு 0.05 சதவீதம் உயர்ந்தும் வர்த்தகமாகின.
துறைசார் குறியீடுகளில், நிஃப்டி ஐடி பங்குகள் உயர்ந்தன. ஆனால், நிஃப்டி உலோகம், பார்மா, ரியல் எஸ்டேட், எஃப்எம்சிஜி குறியீடுகள் சரிவுடன் வர்த்தகமாகின்றன.
Stock Market: Sensex down 200 pts, Nifty below 24,150
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.