முகப்பு
வணிகம்

ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் ஜூலை 3ல் அறிமுகம்!

புதுப்பிக்கப்பட்ட க்விட் பேஸ்லிப்ட் கார் பற்றி..

Updated On : 1 ஜூலை 2026, 4:01 pm IST
ரெனால்ட் க்விட் - X
பகிர்:

பிரான்ஸைச் சேர்ந்த ரெனால்ட் நிறுவனம், இந்தியச் சந்தையில் புதுப்புது மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. அதன்படி, மேம்படுத்தப்பட்ட புதிய அம்சங்களுடன் க்விட் பேஸ்லிப்ட் காரை ஜூன் 3-ம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது.

ரெனால்ட் நிறுவனம், புதுப்பிக்கப்பட்ட க்விட் பேஸ்லிப்ட் கார் மாடலில் வெளிப்புற தோற்றும் மற்றும் உட்புற வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பம்சங்கள் என்ன?

Advertisement

Advertisement

வடிவமைப்பைப் பொறுத்தவரை, ஒய் வடி எல்இடி, டிஆர்எல்-கள், டெயில் லேம்புகள், புதிய பம்பர்கள் மற்றும் புதிய அலாய் வீல்கள், ஸ்பிலிட் ஹெட்லேம்ப் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளது.

உட்புறத்தில் சுமார் 10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு, புதிய ஸ்டீயரிங் வீல், புதுப்பிக்கப்பட்ட டாஷ்போர்டு மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இடம் பெறும் என புதிய அம்சங்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு அம்சமாக 6 ஏர்பேக்குகளும் வழங்கப்படும். புதிய க்விட்டில், 67 பிஎச்பி மற்றும் 91 என்எம் ஆற்றலை வெளிப்படுத்தும். மேலும், 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்படும்.

தற்போதைய மாடலை விடச் சற்று அதிக விலையில் புதிய க்விட் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Renault India has announced that the Kwid facelift will be launched on July 3. The brand's entry-level hatchback is expected to get cosmetic changes and new features.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments