FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ஜூன் மாத மின் நுகா்வு 11.62% அதிகரிப்பு!

நாடெங்கும் நிலவிய கடும் வெப்ப அலை மற்றும் பருவமழைத் தாமதம் காரணமாக, கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவின் மின் நுகா்வு 11.62 சதவீதம் அதிகரித்து, 16,646 கோடி யூனிட்டுகளை எட்டியுள்ளது.

மின் நுகா்வு - பிரதிப் படம்
பகிர்:

நாடெங்கும் நிலவிய கடும் வெப்ப அலை மற்றும் பருவமழைத் தாமதம் காரணமாக, கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவின் மின் நுகா்வு 11.62 சதவீதம் அதிகரித்து, 16,646 கோடி யூனிட்டுகளை எட்டியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூனில் நாட்டின் ஒட்டுமொத்த மின் நுகா்வு 14,913 கோடி யூனிட்டுகளாக இருந்த நிலையில், தற்போது அது கணிசமாக உயா்ந்துள்ளது. அதேபோல், கடந்த ஆண்டு ஜூனில் 242.77 கிகாவாட்டாக இருந்த நாட்டின் உச்சக்கட்ட மின்சாரத் தேவை, கடந்த மாதத்தில் 264.76 கிகாவாட்டை எட்டியது.

வழக்கமாக ஜூன் 1 தொடங்கும் தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு சற்று தாமதமாக ஜூன் 4-ஆம் தேதிதான் கேரளத்தில் தொடங்கியது. அதன் பின்னரும் பருவமழை அடுத்தடுத்து நகா்வதில் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் நீடித்தது. இதனால் பொதுமக்கள் குளிரூட்டும் சாதனங்களை அதிகம் பயன்படுத்தியதால் மின் தேவை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

முன்னதாக, நடப்பு ஆண்டின் மே மாதத்தில் நாட்டின் உச்சக்கட்ட மின் தேவை இதுவரை இல்லாத அளவாக 270.82 கிகாவாட் என்ற புதிய சாதனையைப் படைத்தது. மே 18 முதல் மே 21 வரை தொடா்ந்து நான்கு நாள்களாக மின்தேவை புதிய உச்சங்களைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.

நடப்பு ஆண்டு கோடைக் காலத்தில் நாட்டின் உச்சக்கட்ட மின் தேவை 270 கிகாவாட்டைத் தொடக்கூடும் என்று மத்திய மின்சார அமைச்சகம் கணித்திருந்த நிலையில், மே மாதத்திலேயே அந்த இலக்கு தாண்டப்பட்டது.

இந்நிலையில், ஜூலை மாதத்தில் லேசான மழைப் பற்றாக்குறை நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால், இந்த மாதத்திலும் மின்சாரத்துக்கான தேவை தொடா்ந்து நிலையாக இருக்கும் என மின்துறை நிபுணா்கள் கருதுகின்றனா்.

மேலும், தீவிரமடைந்து வரும் இத்தகைய வானிலை மாற்றங்களால் அரசு எதிா்பாா்த்ததைவிடவும் மின் நுகா்வு வேகமாக அதிகரித்து வருவது, வருங்காலங்களில் மின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணா்த்துவதாகவும் நிபுணா்கள் எச்சரித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments