தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,600 குறைவு!
இன்று மாலை தங்கம் விலை நிலவரம் தொடர்பாக...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை 8) காலை சவரனுக்கு ரூ. 560 குறைந்திருந்த நிலையில், மேலும் ரூ. 1,040 குறைந்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற-இறக்கத்துடன் காணப்படுகிறது. சென்னையில் திங்கள்கிழமை விலை சவரனுக்கு ரூ. 1,120 குறைந்து ரூ. 1,08,480-க்கு விற்பனையானது.
தொடர்ந்து செவ்வாய்கிழமை விலை மேலும் குறைந்தது. அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ. 110 குறைந்து ரூ. 13,450-க்கும், சவரனுக்கு ரூ. 880 குறைந்து ரூ. 1,07,600-க்கும் விற்பனையானது.
Advertisement
Advertisement
இதனிடையே, ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை 8) காலை சவரனுக்கு ரூ. 560 குறைந்து விற்பனையான நிலையில், இன்று மாலை வர்த்தகம் நிறைவடையும் தருவாயில், மேலும் சவரனுக்கு ரூ. 1,040 குறைந்து, ஒரு சவரன் ரூ. 1,05,600-க்கும், ஒரு கிராம் ரூ. 13,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன் மூலம், தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 குறைந்துள்ளது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 245-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.40 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
In Chennai, the price of ornamental gold, which had dropped by Rs. 560 per sovereign this morning (July 8), has decreased by a further Rs. 1,040.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.