முகப்பு
வணிகம்

சரிந்து மீளும் பங்குச்சந்தை! ஐடி பங்குகள் உயர்வு!!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...

Updated On : 1 ஜூன் 2026, 11:34 am IST
கோப்புப்படம் - IANS
பகிர்:

இந்த வாரத்தின் முதல் நாளான இன்று(ஜூன் 1, திங்கள்) பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கி தற்போது உயர்வுடன் வர்த்தகமாகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 75,203.02 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 140.16 புள்ளிகள் உயர்ந்து 74,915.90 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 31.15
புள்ளிகள் உயர்ந்து 23,578.90 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Advertisement

Advertisement

துறைரீதியாக நிஃப்டி வங்கி, நிதிச் சேவைகள், நுகர்வோர் பொருள்கள், ரியல் எஸ்டேட் ஆகியவை சரிவில் உள்ளன. அதேநேரத்தில் ஐடி பங்குகள் உயர்வுடன் வர்த்தகமாகின்றன.

தற்போதைய நிலவரப்படி, சென்செக்ஸ் 30 பங்குகளில் ட்ரென்ட், என்டிபிசி, கோட்டக் வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகிய 4 நிறுவனங்கள் சரிந்தும் மற்ற நிறுவனங்கள் லாபம் பெற்றும் வருகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வர்த்தக தொடக்கத்தில் 94.97 ஆக இருந்தது.

summary

Stock Market : Sensex climbs 150 pts, Nifty above 23,550; IT stocks rally

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.