பங்குச்சந்தை: சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு! ரியல் எஸ்டேட் பங்குகள் சரிவு!
பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகமாவது பற்றி...
பங்குச்சந்தைகள் இன்று(மே 22) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 75,260.39 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 460.98 புள்ளிகள் உயர்ந்து 75,644.34 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 125.10
புள்ளிகள் உயர்ந்து 23,779.80 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
Advertisement
Advertisement
நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.13 சதவீதம் உயர்ந்தும், ஸ்மால்கேப் குறியீடு 0.08 சதவீதம் சரிந்து வர்த்தகமாகிறது.
துறைவாரியாக நிஃப்டி ரியல் எஸ்டேட், மீடியா, பார்மா, எண்ணெய் & எரிவாயு, சுகாதார சேவைகள் ஆகியவை சரிந்து வர்த்தகமாகி வரும் நிலையில் நிதி சேவைகள் உயர்வுடன் வணிகமாகின்றன.
சென்செக்ஸில் 30ல் 23 பங்குகள் லாபடமடைந்து வருகின்றன. பெல், ஹெச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா, டிசிஎஸ், பவர் கிரிட், இன்போசிஸ்ம் ஐடிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்துள்ளன.