முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 800 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் சரிவு!!

பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகமாவது பற்றி...

பங்குச்சந்தை - ANI
பகிர்:

பங்குச்சந்தைகள் 4 நாள்கள் வீழ்ச்சிக்குப் பிறகு நேற்று சற்றே உயர்வுடன் நிறைவடைந்த நிலையில் இன்றும்(மே 14) உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 74,947.12 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11. 45 மணியளவில் சென்செக்ஸ் 807.25 புள்ளிகள் உயர்ந்து 75,387.88 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 256.15
புள்ளிகள் உயர்ந்து 23,668.75 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Advertisement

Advertisement

நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.09 சதவீதம் உயர்ந்தும், ஸ்மால்கேப் குறியீடு 0.77 சதவீதம் சரிந்து வர்த்தகமாகிறது.

துறைவாரியாக நிஃப்டி பார்மா, சுகாதார சேவைகள், உலோகம் ஆகிய பங்குகள் உயர்ந்தும் ஐடி உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் வருகின்றன.

நிஃப்டி 50 குறியீடுகளில் சிப்லா, அதானி என்டர்பிரைசஸ், பாரதி ஏர்டெல் அதிக லாபம் பெற்றன. சென்செக்ஸில் 30ல் 25 பங்குகள் லாபடமடைந்து வருகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு 95.73 ஆகக் குறைந்துள்ளது.

summary

Stock Market: Sensex jumps 800 pts; Nifty near 23,700

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments