முகப்பு
வணிகம்

யூடியூப் விடியோவில் ஏஐ காட்சிகளை அடையாளம் காண்பது எப்படி?

யூடியூப் விடியோக்களில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட காட்சிகளை எளிமையாக அடையாளம் காணும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 23 ஜூன் 2026, 4:15 pm IST
யூடியூப் - கோப்புப் படம்
பகிர்:

யூடியூப் தளத்தின் விடியோக்களில் இடம்பெறும் காட்சிகள் உண்மையானதா அல்லது செய்யறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்டதா? என்பதை இனி எளிமையாக அடையாளம் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கூகுளுக்கு இணையாக யூடியூப் பக்கத்திலும் அனைத்திற்கும் விடியோ பதில்கள் உள்ளன. முன்பு விடியோ உருவாக்கு பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது செய்யறிவு உதவியுடன் விடியோ உருவாக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இதனால் நாம் பார்க்கும் விடியோ உண்மையானதா? அல்லது செய்யறிவு மூலம் உருவாக்கப்பட்டதா? என்ற சந்தேகம் எழும். தற்போது அந்த சந்தேகத்திற்கு யூடியூப் பதில் அளித்துள்ளது.

Advertisement

Advertisement

யூடியூபில் விடியோ பார்க்கும்போது ஏஐ பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தத்ரூபமான காட்சிகள், இயல்பான காட்சிகளுடன் சேர்ந்து ஒளிபரப்பாகும். இனி இதுபோன்று ஒளிபரப்பாகும்போது செயற்கையாக சேர்க்கப்பட்ட ஏஐ காட்சி வரும்போது ''ஏஐ'' என்ற லேபில் விடியோவில் இடம்பெறும் என யூடியூப் தெரிவித்துள்ளது.

அதாவது இயல்பான காட்சியுடன் செயற்கையான காட்சி இடம்பெற்றால் அந்த இடத்தில் ஏஐ என்ற லேபில் இடம்பெறும்.

யூடியூப் விடியோ / ஷார்ட்ஸ்களில் இடம்பெறும் ஏஐ லேபில் - படம் / நன்றி - யூடியூப்

நீண்ட விடியோக்களுக்கு விடியோவின் கீழும், டிஸ்கிரிப்ஷனிலும் ஏஐ லேபில் இடம்பெறும். ஷார்ட்ஸ் எனப்படும் குறுவிடியோக்களுக்கு விடியோவின் மேலேயே ஏஐ லேபில் இடம்பெறும்.

இதன்மூலம் ஏஐ காட்சிகள் எவை என்பதை பார்வையாளர்கள் எளிதில் அறிந்துகொள்ள முடியும் என யூடியூப் விளக்கம் அளித்துள்ளது.

எதார்த்தமற்ற, அனிமேஷன், சற்றே மீள் எதார்த்தம் கொண்ட காட்சிகள் இடம்பெறும் விடியோக்களில் இந்த ஏஐ லேபில் இடம்பெறும் என யூடியூப் தெரிவித்துள்ளது.

summary

How to identify AI-generated scenes in a YouTube video?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments