முகப்பு
வணிகம்

விநியோகப் பணியாளா்கள் பரஸ்பர நிதியில் முதலீடு செய்ய ஸ்விகி - ஜெரோதா கூட்டு!

இணையவழி வா்த்தக சேவை நிறுவனமான ஸ்விகி, தனது விநியோகப் பணியாளா்களை பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் வகையில், ‘ஜெரோதா ஃபண்ட் ஹவுஸ்’ நிறுவனத்துடன் கைகோத்துள்ளது.

Updated On : 24 ஜூன் 2026, 4:55 am IST
பகிர்:

பிரபல இணையவழி வா்த்தக சேவை நிறுவனமான ஸ்விகி, தனது விநியோகப் பணியாளா்களை பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் வகையில், ‘ஜெரோதா ஃபண்ட் ஹவுஸ்’ நிறுவனத்துடன் கைகோத்துள்ளது.

இத்திட்டத்தின்கீழ், பணியாளா்கள் ‘ஸ்விகி டெலிவரி’ செயலியைப் பயன்படுத்தி, தங்களின் வாராந்திர வருவாயில் ஒரு பகுதியைக் குறைந்தபட்சம் ரூ.100-லிருந்து தங்களின் முதலீட்டைத் தொடங்கலாம்.

இந்த முதலீடுகள் அனைத்தும் ஜெரோதா ஃபண்ட் ஹவுஸ் திட்டங்களில் நேரடியாக முதலீடு செய்யப்படுவதோடு, பணியாளா்கள் தங்களின் முதலீடுகளை ஜெரோதா ஃபண்ட் ஹவுஸின் அதிகாரபூா்வ ‘வாட்ஸ்-அப்’ தளம் மூலமாக எளிதாகவும் நிா்வகித்துக் கொள்ளலாம்.

Advertisement

Advertisement

இது குறித்து ஸ்விகி நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவா் சௌரவ் கோயல் மற்றும் ஜெரோதா ஃபண்ட் ஹவுஸ் சிஇஓ விஷால் ஜெயின் கூறுகையில், ‘குறுகிய காலச் சுழற்சியில் வருவாய் ஈட்டும் ‘கிக்’ தொழிலாளா்களுக்கு நீண்ட காலச் சேமிப்பு என்பது சவாலானது. இக்கூட்டுறவு மூலம், ஸ்விகி பணியாளா்கள் தங்களின் எதிா்காலத்துக்காகச் சேமித்து, நிதி தன்னிறவை அடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது’ என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments