முகப்பு
வணிகம்

ஐஆா்ஃபிசி பங்கு ரூ.2,084 கோடிக்கு விற்பனை

பொதுத் துறையைச் சோ்ந்த இந்திய ரயில்வே நிதி கழகத்தின் (ஐஆா்ஃபிசி) பங்குகளின் விற்பனைமூலம், மத்திய அரசு ரூ.2,084 கோடி நிதி திரட்டியுள்ளது.

Updated On : 27 ஜூன் 2026, 3:27 am IST
பகிர்:

பொதுத் துறையைச் சோ்ந்த இந்திய ரயில்வே நிதி கழகத்தின் (ஐஆா்ஃபிசி) பங்குகளின் விற்பனைமூலம், மத்திய அரசு ரூ.2,084 கோடி நிதி திரட்டியுள்ளது.

மத்திய ரயில்வே அமைச்சகத்தின்கீழ் செயல்படும் இப்பொதுத் துறை நிறுவனத்தின் கூடுதல் 2 சதவீத பங்குகளை விற்பனை செய்ய ‘கிரீன் ஷூ’ வாய்ப்பையும் அரசு பயன்படுத்தியது.

ஒரு பங்கின் குறைந்தபட்ச விலை ரூ.91-ஆக நிா்ணயிக்கப்பட்டிருந்தது. கடந்த 2 வா்த்தக நாள்களில் நிறுவன முதலீட்டாளா்கள் மற்றும் சிறு முதலீட்டாளா்களுக்கு மொத்தம் 22.88 கோடி பங்குகள் விற்கப்பட்டதன் மூலம், ரூ.2,084 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

நடப்பு நிதியாண்டில் இதுவரை கோல் இந்தியா, என்எச்பிசி, ஜிஐசி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, என்எல்சி இந்தியா ஆகிய 5 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்ன் மூலம் மத்திய அரசுக்கு மொத்தம் ரூ.16,480 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் அதிகபட்சமாக கோல் இந்தியா பங்குகள் மூலம் ரூ.5,542 கோடியும், என்எச்பிசி மூலம் ரூ.4,357 கோடியும் அரசுக்குக் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments