ரூ. 5,632.8 கோடி பங்குகளைத் திரும்பப் பெறும் பஜாஜ் ஆட்டோ!
பஜாஜ் ஆட்டோ ரூ. 5,632.8 கோடி மதிப்பிலான பங்குகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையை, ஜூலை 1 ஆம் தேதியன்று தொடங்கவுள்ளதாக இன்று அறிவித்தது.
புதுதில்லி: பஜாஜ் ஆட்டோ ரூ. 5,632.8 கோடி மதிப்பிலான பங்குகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையை, ஜூலை 1 ஆம் தேதியன்று தொடங்கவுள்ளதாக இன்று அறிவித்தது.
ஒவ்வொரு பங்கும் ரூ. 10 முகமதிப்பு கொண்டவை என மொத்தம் 46.94 லட்சம் ஈக்விட்டி பங்குகளை, பங்கு ஒன்றுக்கு ரூ. 12,000 என்ற விலையில், ரொக்கமாக திரும்பப் பெறவுள்ளதாக செபியிடம் தெரிவித்தது. இதற்காக மொத்தம் ரூ. 5,632.8 கோடி செலவிட போவதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்தது.
இந்தத் திட்டம் முதலில், இயக்குநர்கள் குழுவால் மே 6 ஆம் தேதியன்று அங்கீகரிக்கப்பட்ட நிலையில், பிறகு மே 14, 2026 அன்று அஞ்சல் வாக்கு மூலம் பங்குதாரர்களின் சிறப்புத் தீர்மானம் வாயிலாக ஒப்புதல் பெறப்பட்டது.
Advertisement
Advertisement
பங்கை திரும்பப் பெறும் நடவடிக்கை ஜூலை 01 தொடங்கி, ஜூலை 07 அன்று நிறைவடையும் என்றது.
Bajaj Auto Ltd said its Rs 5,632.8 crore share buyback will start from July 1.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.