4வது காலாண்டில் ரூ. 405 கோடி லாபம் ஈட்டிய மனப்புரம் ஃபைனான்ஸ்!
2026 நிதியாண்டின் 4வது காலாண்டில், மனப்புரம் ஃபைனான்ஸ் ரூ. 405 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக இன்று தெரிவித்தது.
புதுதில்லி: 2026 நிதியாண்டின் 4வது காலாண்டில், மனப்புரம் ஃபைனான்ஸ் ரூ. 405 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக இன்று தெரிவித்தது. கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ. 203 கோடி நஷ்டத்தைச் சந்தித்தது.
2025 ஜனவரி முதல் மார்ச் வரையான காலகட்டத்தில் ரூ. 2,301 கோடியாக இருந்த வட்டி வருவாய், இக்காலாண்டில் ரூ. 2,513 கோடியாக உயர்ந்தது.
2026 நிதியாண்டின் மார்ச் வரையான காலாண்டில், நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ. 2,614 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ. 2,361 கோடியாக இருந்தது.
Advertisement
Advertisement
2025-26 முழு நிதியாண்டிற்கும், மனாப்புரம் ஃபைனான்ஸ் தனது லாபம் 17.5 சதவீதம் குறைந்து, ரூ. 993 கோடியாகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதுவே கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் லாபம் ரூ. 1,204 கோடியாக இருந்தது.
தங்கம் மீதான கடன் வழங்கும் இந்நிறுவனம், தலா ரூ. 2 முகமதிப்பு கொண்ட ஒவ்வொரு பங்குக்கும் ரூ. 0.50 இடைக்கால ஈவுத்தொகையை அறிவித்தது.
மும்பை பங்குச் சந்தையில், மனப்புரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகள் ரூ. 305.25ஆக வர்த்தகமானது.
Manappuram Finance reported a profit of Rs 405 crore in the January-March quarter of FY26.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.