கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி எதிரொலி: விமான துறைப் பங்குகளின் விலை அதிகரிப்பு!!
இன்றைய வர்த்தகத்தில், விமானத் துறைப் பங்குகள் 7 சதவீதம் வரை உயர்ந்தன.
புதுதில்லி: கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சி மற்றும் மேற்கு ஆசிய மோதலால் பாதிக்கப்பட்ட விமான நிறுவனங்களுக்குக் கடன் உதவி அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக, முதலீட்டாளர்கள் அதிக அளவில் அதன் பங்குகளை வாங்கியதால், இன்றைய வர்த்தகத்தில், விமானத் துறைப் பங்குகள் 7 சதவீதம் வரை உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில், இன்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனத்தின் பங்குகள் 6.60 சதவீதம் உயர்ந்து, ரூ. 4,519.55ஆக நிலைபெற்றது. வர்த்தக இடையே, இப்பங்குகள் 7.64 சதவீதம் வரை உயர்ந்து ரூ. 4,563.75ஆக வர்த்தகமானது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்குகள் 4.96 சதவீதம் உயர்ந்து, ரூ. 12.70ஆக வர்த்தகம் நிறைவடைந்தது.
Advertisement
Advertisement
சர்வதேச கச்சா எண்ணெய் விலை, 10.50 சதவீதம் வீழ்ச்சியடைந்து, பேரலுக்கு ஒன்றுக்கு 98 அமெரிக்க டாலராக உள்ளது.
மேற்கு ஆசிய மோதலால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும், விமான நிறுவனங்களுக்கும் நிவாரணம் அளிக்கும் வகையில், ரூ. 18,100 கோடி மதிப்பிலான 'அவசரகாலக் கடன் உத்தரவாதத் திட்டத்தை' மத்திய அரசு அறிவித்தது.
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் காரணமாக இண்டிகோ, பிபிசிஎல், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் பிடிலைட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன.
Aviation shares rallied up to 7 per cent on Wednesday amid a sharp decline in crude oil prices.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.