கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் எண்ணெய் மற்றும் பெயிண்ட் நிறுவனங்களின் பங்குகள் உயர்வு!
கச்சா எண்ணெய் சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் உயர்வுடன் நிறவடைந்தன.
புதுதில்லி: கச்சா எண்ணெய் சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் உயர்வுடன் நிறவடைந்தன.
பேரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலருக்கும் கீழே சரிந்த கச்சா எண்ணெய் விலை, கடுமையான வீழ்ச்சிக்கு மத்தியில், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் மற்றும் பெயிண்ட் உற்பத்தியாளர்களின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு 6.89 சதவிகிதமும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு 5.12 சதவிகிதமும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்கு 4.22 சதவிகிதமும் உயர்ந்தன.
Advertisement
Advertisement
பெயிண்ட் உற்பத்தி நிறுவனங்களான இண்டிகோ பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 3.77 சதவிகிதமும், ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 3.56 சதவிகிதமும், ஷாலிமார் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 2.33 சதவிகிதமும், பெர்ஜர் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 1.67 சதவிகிதமும் உயர்ந்தன.
Shares of oil marketing companies and paint manufacturers climbed on Wednesday amid a steep decline in oil prices.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.