கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!
சென்செக்ஸ் 347.14 புள்ளிகள் உயர்ந்து 77,155.62 புள்ளிகளாகவும், நிஃப்டி 96.55 புள்ளிகள் உயர்ந்து 24,085.70 புள்ளிகளாக நிலைபெற்றது.
மும்பை: அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்றைய வர்த்தகத்தில் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இதன் மூலம் இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து 4வது நாளாக உயர்ந்து முடிவடைந்தன.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 410.51 புள்ளிகள் அதிகரித்து 77,218.99 புள்ளிகளை எட்டிய நிலையில், நஃப்டி குறியீடும் 119.05 புள்ளிகள் அதிகரித்து 24,108.20 புள்ளிகளை எட்டியது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 347.14 புள்ளிகள் உயர்ந்து 77,155.62 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 96.55 புள்ளிகள் உயர்ந்து 24,085.70 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸில் ட்ரெண்ட் பங்குகள் அதிகபட்சமாக 7.06 சதவீதம் உயர்ந்த நிலையில் பாரத் எலக்ட்ரானிக்ஸ், எடர்னல், டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ், டைட்டன் மற்றும் பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகளும் உயர்ந்தன. மறுபுறம் பஜாஜ் ஃபின்சர்வ், ஆக்சிஸ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா ஆகிய பங்குகள் சரிந்தன.
Advertisement
Advertisement
நிஃப்டி-யில் ட்ரென்ட், பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், எடர்னல் மற்றும் டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் டாடா மோட்டார்ஸ் பேசஞ்சர் வெஹிக்கிள்ஸ், சிப்லா, பஜாஜ் ஃபின்சர்வ், ஓஎன்ஜிசி மற்றும் ஆக்சிஸ் வங்கியின் பங்குகள் சரிந்தன.
நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 0.5 சதவீதமும் ஸ்மால்கேப் 100 குறியீடு 0.8 சதவீதம் உயர்ந்தன.
துறைவாரியாகப் பார்த்தால், நுகர்வோர் பொருட்கள், உலோகங்கள், மின்சாரம் மற்றும் பொதுத்துறை வங்கிகள் தலா 1 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தன. இதற்கு நேர்மாறாக ஆட்டோ மற்றும் ரியல்டி குறியீடுகள் தலா 0.5 சதவீதம் சரிந்தன.
டேட்டா பேட்டர்ன்ஸ், யெஸ் பேங்க், கேஇஐ இண்டஸ்ட்ரீஸ், கிர்லோஸ்கர் ஆயில், நுவமா வெல்த், பாலிகேப், சிஜி பவர், ஏஜிஸ் லாஜிஸ்டிக்ஸ், ஹிமாத்ரி ஸ்பெஷாலிட்டி, ஐஎஃப்சிஐ, வருண் பெவரேஜஸ், ஜேகே வங்கி, பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ், ஃபெடரல் வங்கி, நெட்வெப், பந்தன் வங்கி உள்ளிட்ட 120 க்கும் மேற்பட்ட பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் இன்று 52 வார உச்சத்தை எட்டியது.
தரவுகளின் அடிப்படையில், நேற்று வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 749.18 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
ஆசியச் சந்தையை பொறுத்தவரை, தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கி 225 மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு ஏற்றத்துடன் முடிவடைந்த நிலையில், ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு சரிவுடன் நிறைவடைந்தன.
ஐரோப்பியச் சந்தைகள் கலவையான போக்கில் நிறைவடைந்த நிலையில், அமெரிக்க பங்குச் சந்தைகள் நேற்று பெரும்பாலும் சரிவுடன் நிறைவு பெற்றது.
சர்வதேச அளவில், பிரெண்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு சுமார் 79.10 அமெரிக்க டாலர் என்ற விலையில் வர்த்தகமானது.
Stock market benchmark indices Sensex and Nifty ended higher on Wednesday for the fourth straight session.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.