இரண்டு நாள் சரிவுக்குப் பிறகு மீண்ட பங்குச் சந்தை! சென்செக்ஸ் 444 புள்ளிகள் உயர்வு!!
சென்செக்ஸ் 443.97 புள்ளிகள் உயர்ந்து 76,922.64 புள்ளிகளாகவும், நிஃப்டி 140.10 புள்ளிகள் உயர்ந்து 24,005.85 புள்ளிகளாக நிலைபெற்றது.
மும்பை: கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் உலகளாவிய பங்குச் சந்தையில் நிலவி வரும் சாதகமான சூழல் உள்ளிட்டவையால், இரண்டு நாள் சரிவுக்குப் பிறகு இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மீண்டெழுந்தன.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 631.41 புள்ளிகள் அதிகரித்து 77,110.08 புள்ளிகளை எட்டியது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 443.97 புள்ளிகள் உயர்ந்து 76,922.64 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 140.10 புள்ளிகள் உயர்ந்து 24,005.85 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸில் ஏசியன் பெயின்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், அதானி போர்ட்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் எச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டாடா ஸ்டீல் மற்றும் இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்தன.
Advertisement
Advertisement
நிஃப்டி-யில் எடர்னல், அதானி எண்டர்பிரைசஸ், நெஸ்லே இந்தியா, எச்.யு.எல், ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகிய பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் எச்.சி.எல். டெக்னாலஜிஸ், டெக் மஹிந்திரா, டிசிஎஸ், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் சரிந்தன.
நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 0.3 சதவீதம் உயர்ந்தன.
துறைவாரியாகப் பார்த்தால், ரியல்டி குறியீடு 3.5 சதவீதமும், எஃப்எம்சிஜி மற்றும் மீடியா குறியீடுகள் தலா 2 சதவீதமும், ஆட்டோ மற்றும் பொதுத்துறை வங்கி குறியீடுகள் தலா 1% உயர்ந்தன. மறுபுறம் ஐடி குறியீடு 2% சதவீதமும், மெட்டல் குறியீடு 1 சதவீதமும் மற்றும் பார்மா குறியீடு 0.5 சதவீதம் சரிந்தன.
மிகவும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க-இந்திய வர்த்தக ஒப்பந்தம், தணிந்து வரும் பதற்றங்கள் மற்றும் சாதகமான கச்சா எண்ணெய் விலை உள்ளிட்டவை பங்குச் சந்தை உயர்வுக்கு முக்கிய காரணிகளாக அமைந்தன.
ஏதர் எனர்ஜி, கிருஷ்ணா இன்ஸ்டிடியூட், மரிகோ, ஏசிஎம்இ சோலார், ஏஜிஸ் லாஜிஸ்டிக்ஸ், ஃபீனிக்ஸ் மில்ஸ், கிரானுல்ஸ் இந்தியா, ஸ்டார் ஹெல்த், நவின் ஃப்ளூரின், ஐப்கா லேபரட்டரீஸ், பிரமல் ஃபைனான்ஸ், ஜேபி கெமிக்கல்ஸ் & பார்மசூட்டிகல்ஸ், அஜந்தா பார்மா, குஜராத் ஃப்ளூரோகெமிக்கல்ஸ், அரவிந்தோ பார்மா, வெல்ஸ்பன் கார்ப் மற்றும் லாரஸ் லேப்ஸ் உள்ளிட்ட 160க்கும் மேற்பட்ட பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 52 வார உச்சத்தை எட்டியது.
தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 2,556.75 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
ஆசியச் சந்தைகளைப் பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி 225 குறியீடு மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு ஆகியவை உயர்ந்த நிலையில் தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு சரிவுடன் நிறைவடைந்தன.
ஹாங்காங் சந்தை விடுமுறை காரணமாக மூடப்பட்டிருந்தன. ஐரோப்பியச் சந்தைகள் பெரும்பாலும் சரிவுடனேயே வர்த்தகமானது.
அமெரிக்கச் சந்தை நேற்று (செவ்வாய்க்கிழமை) உயர்ந்து நிறைவடைந்தன.
உலகளாவிய 'பிரெண்ட்' கச்சா எண்ணெய் விலை 1.07 சதவீதம் குறைந்து பீப்பாய் ஒன்றுக்கு 72.17 அமெரிக்க டாலராக உள்ளது.
Market benchmark indices Sensex and Nifty rebounded on Wednesday after two days of decline.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.