FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

3வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச் சந்தை: சென்செக்ஸ் 166 புள்ளிகள் உயர்வு!

சென்செக்ஸ் 166.49 புள்ளிகள் உயர்ந்து 78,094.64 புள்ளிகளாகவும், நிஃப்டி 66.45 புள்ளிகள் உயர்ந்து 24,383.60 புள்ளிகளாக நிலைபெற்றது.

Updated On : 31 ஜூலை 2026, 5:43 pm IST
கோப்புப் படம்
பகிர்:

மும்பை: பஜாஜ் ஃபைனான்ஸ் பங்கின் வலுவான ஏற்றத்தை தொடர்ந்து வெளிநாட்டு முதலீடுகள் வருகை மற்றும் சரிந்து வரும் கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றால், இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு தொடர்ந்து 3வது நாளாக உயர்வுடன் நிறைவடைந்தன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், ​​சென்செக்ஸ் 344.1 புள்ளிகள் அதிகரித்து 78,272.25 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 166.49 புள்ளிகள் உயர்ந்து 78,094.64 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 66.45 புள்ளிகள் உயர்ந்து 24,383.60 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸில் பஜாஜ் ஃபைனான்ஸ் 8.11 சதவீதம் உயர்ந்த நிலையில், நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சியில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியவற்றால், ஜூன் காலாண்டிற்கான அதன் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 28 சதவீதம் அதிகரித்து ரூ. 6,081 கோடியாக இருப்பதாக நிறுவனம் அறிவித்ததே இந்த உயர்வுக்குக் காரணமாக அமைந்தது.

Advertisement

Advertisement

நிதியாண்டின் ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 28 சதவீதம் அதிகரித்து ரூ. 6,081 கோடியாக உயர்ந்துள்ளது. அதன் முக்கிய வருவாய் வளர்ச்சியில் ஏற்பட்ட முன்னேற்றம் இதற்கு முக்கியக் காரணமாக அமைந்த நிலையில், பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பங்கின் விலை 8.11 சதவீதம் வரை உயர்ந்தன.

சென்செக்ஸ் குறியீட்டில் பஜாஜ் ஃபின்சர்வ், மஹிந்திரா & மஹிந்திரா, அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டைட்டன் உள்ளிட்ட பங்குகுகள் உயர்ந்தும் மறுபுறம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், ஐடிசி மற்றும் இன்டர்குளோப் ஏவியேஷன் ஆகிய பங்குகள் சரிந்தன.

இந்த வாரத்தில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 குறியீடுகள் 2.6 சதவீதம் உயர்ந்தன. இதன் மூலம் கடந்த வாரத்தின் இழப்புகள் அனைத்தும் ஈடுசெய்யப்பட்டு, வார இறுதியில் சந்தை வலுவான நிலையில் நிறைவடைந்தன. அதே வேளையில் நிஃப்டி மிட்கேப் 100 மற்றும் ஸ்மால்கேப் 100 குறியீடுகள் தலா 0.4 சதவீதம் உயர்ந்தன.

துறைவாரியான செயல்பாடுகள் பெரும்பாலும் நிஃப்டி-யில் சாதகமாக இருந்தன. நிஃப்டி மீடியா 2 சதவீதம் உயர்ந்து அதிக லாபம் ஈட்டிய துறையாகத் திகழ்ந்த நிலையில் ஆட்டோ 1.6 சதவீதமும், ஆயில் & கேஸ் 1 சதவீதமும், எனர்ஜி 1 சதவீதமும், பார்மா 0.7 சதவீதமும், இன்ஃப்ரா 0.7 சதவீதமும் மற்றும் பொதுத்துறை வங்கி 0.5 சதவீதமும் உயர்ந்தும், ஐடி 1.5 சதவீதமும், எஃப்எம்சிஜி 1 சதவீதம் சரிந்தது.

பங்குச் சந்தை தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று ரூ. 3,623.51 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.

அதிகரித்த கடன் பத்திர வருவாய் மற்றும் வட்டி விகித உயர்வு குறித்த கவலைகளுக்கு மத்தியில் முதலீட்டாளர்களின் எச்சரிக்கை போக்கும் தொடர்ந்தது. இருப்பினும் சில முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை உச்சம் தொட்ட நிலையில், லாபத்தை ஈட்டினர்.

ஆசியச் சந்தைகளைப் பொறுத்தவரை, தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு வலுவாக மீண்டு 17.91 சதவீதம் உயர்ந்தது. ஜப்பானின் நிக்கி 225, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடுகளும் நேர்மறையான நிலையிலேயே வர்த்தகத்தை நிறைவு செய்தன.

ஐரோப்பியச் சந்தைகளும் ஏற்றத்துடன் வர்த்தகமானது. அமெரிக்கச் சந்தைகள் நேற்று (வியாழக்கிழமை) குறிப்பிடத்தக்க உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.45 சதவீதம் உயர்ந்து, பீப்பாய் ஒன்றுக்கு 89.43 அமெரிக்க டாலராக உள்ளது.

summary

Stock market benchmark indices Sensex and Nifty ended higher for the third day on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments