2வது நாளாக உயர்ந்த சென்செக்ஸ், நிஃப்டி!
சென்செக்ஸ் 308.49 புள்ளிகள் உயர்ந்து 74,459.53 புள்ளிகளாகவும், நிஃப்டி 116.35 புள்ளிகள் உயர்ந்து 23,053.10 புள்ளிகளாக நிலைபெற்றது.
மும்பை: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஏற்பட்ட வலுவான கொள்முதலை தொடர்ந்து டாடா குழுமத்தின் சில்லறை வர்த்தகப் பிரிவான டிரெண்ட்ஸ் நிறுவனத்தின் வருவாய் சார்ந்த வளர்ச்சி உள்ளிட்டவையால், பங்குச் சந்தைக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து 2வது நாளாக ஏற்றம் கண்டது.
இன்றயை காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 591.55 புள்ளிகள் உயர்ந்து, 74,742.59 புள்ளிகளை எட்டியது. பிறகான வர்த்தகத்தில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 308.49 புள்ளிகள் உயர்ந்து 74,459.53 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 116.35 புள்ளிகள் உயர்ந்து 23,053.10 புள்ளிகளாக நிலைபெற்றது.
டாடா குழுமத்தின் சில்லறை வர்த்தகப் பிரிவான டிரெண்ட்ஸ், செப்டம்பர் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 25 சதவீதம் அதிகரித்து ரூ. 468 கோடியாக உயர்ந்ததையடுத்து அதன் பங்குகள் 5.20 சதவீதம் உயர்ந்தன.
Advertisement
Advertisement
சென்செக்ஸில் இன்டர்குளோப் ஏவியேஷன், இன்ஃபோசிஸ், என்டிபிசி, பவர் கிரிட், எடர்னல், டெக் மஹிந்திரா மற்றும் எச்.சி.எல் டெக் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, மஹிந்திரா & மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய பங்குகள் சரிந்தன.
பங்குச் சந்தை தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ. 943.60 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தனர்.
ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கி 225 குறியீடு மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு ஆகியவை சரிவுடன் முடிவடைந்தன. இதற்கு மாறாக, ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடு உயர்வுடன் நிலைபெற்றது.
ஐரோப்பிய சந்தைகள் பெரும்பாலும் சரிவுடன் வர்த்தகமானது. நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடன் முடிவடைந்தன.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 2.17 சதவீதம் உயர்ந்து $117.4 ஆக உள்ளது.
Sensex and Nifty rallied supported by robust buying in IT firms and earnings-driven demand in Trent.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.